📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 13, 2026 02:03 PM

டெல்லி ஜந்தர் மந்தர் வளாகத்தில் அத்துமீறி நுழைந்த சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் கைது

டெல்லி ஜந்தர் மந்தர் வளாகத்தில் அத்துமீறி நுழைந்த சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் கைது

புதுடெல்லி, அக். 13:

டெல்லியில் போராட்டக் களம் என்ற அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட ஜந்தர் மந்தர் வளாகத்தின் பூட்டப்பட்ட கதவுகளை ஏறிக்குதித்து அத்துமீறி நுழைந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) தலைமைச் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரான்கா ஆகியோரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் சிஜேபி கட்சியினர் டெல்லியில் தொடர் போராட்டங்களை அறிவித்திருந்தனர். முன்னதாக நடைபெற்ற பெரும் போராட்டங்களை அடுத்து, ஜந்தர் மந்தர் பகுதியில் சட்டப்பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்கு போராட்டங்கள் நடத்த வழங்கப்பட்டு வந்த அதிகாரப்பூர்வ அங்கீகாரமும் திரும்பப் பெறப்பட்டது. அப்பகுதி முழுவதும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

அத்துமீறி நுழைந்த சம்பவம் மற்றும் கைது விவரங்கள்:

முன்னதாக இக்கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தடுத்து வைக்கப்பட்டு நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்த சூழலில், தற்போது செய்தித் தொடர்பாளர்களே நேரடியாகப் பாதுகாப்பு வளையத்தை மீறி கைதாகியுள்ள சம்பவம் தலைநகரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.