📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 07, 2026 06:01 PM

ரவிமோகன் படத்திற்கு இசையமைக்கும் பாடகி கெனிஷா!

ரவிமோகன் படத்திற்கு இசையமைக்கும் பாடகி கெனிஷா!

நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆன் ஆர்டினரி மேன்’. ரவிமோகனே இயக்கி, தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு ரவிமோகனின் தோழி கெனிஷா இசையமைக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இருவரும் காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகி, பின்னர் பிரிந்துவிட்டதாகப் பகிரங்கமாக அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பாடகி கெனிஷா.