📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 17, 2026 02:03 PM

புகைமூட்டம்: சிங்கப்பூர் எஃப்ஏ கிண்ணக் காற்பந்து ஆட்டங்கள் ஒத்திவைப்பு

புகைமூட்டம்: சிங்கப்பூர் எஃப்ஏ கிண்ணக் காற்பந்து ஆட்டங்கள் ஒத்திவைப்பு

சிங்கப்பூரில் நிலவிவரும் கடுமையான புகைமூட்டம் காரணமாக, சனிக்கிழமை (அக்டோபர் 17) ஜூரோங் ஈஸ்ட் விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த சிங்கப்பூர் எஃப்ஏ கிண்ண இறுதிப் போட்டியும் மூன்றாம் இடத்துக்கான ஆட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) இரவு வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் மேற்குப் பகுதியில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 200க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தது.

சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம்-சிங்கப்பூர் பிரீமியர் லீக் புகைமூட்ட நிர்வாக நெறிமுறை 2026ன்கீழ், பொழுதுபோக்குப் போட்டிகளை நடத்துவதற்கான வரம்பை இந்தக் குறியீடு தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, இந்த ஆட்டங்களுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.