📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 17, 2026 04:02 PM

சவுதி அரேபியாவுக்கு அக்டோபர் 24 வரை விமான சேவை நிறுத்தம்; ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

சவுதி அரேபியாவுக்கு அக்டோபர் 24 வரை விமான சேவை நிறுத்தம்; ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

-நமது நிருபர்-

சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்நாட்டின் ஜித்தா, ரியாத் மற்றும் தம்மாம் விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் அங்கு இருந்து இயக்கப்படும் விமான சேவைகளை அக்டோபர் 24ம் தேதி வரை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள், ஜெட்டா, ரியாத் மற்றும் தம்மாம் ஆகிய இடங்களுக்கு விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன. அக்டோபர் 15ம் தேதிக்கு முன்பாக, முன்பதிவு செய்த பயணிகளுக்கு சிறப்பு சலுகை வழங்குகிறோம்.

அக்டோபர் 24ம் தேதிக்கு பிறகு, நவம்பர் 10ம் தேதி வரை தங்களது பயணத்தை வேறு தேதிக்கு கட்டணம் இல்லாமல் மாற்றிக்கொள்ளலாம். இல்லையென்றால், ஏர் இந்தியா பயணிகள் துபாய் அல்லது தோஹா ஆகிய இடங்களுக்கு பயணத்தை மாற்றிக் கொள்ளலாம். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் அபுதாபி, அல் ஐன், பஹ்ரைன், தோஹா, துபாய், குவைத், மஸ்கட், ஷார்ஜா ஆகிய இடங்களுக்கு பயணத்தை மாற்றிக்கொள்ளலாம்.

பயணம் செய்ய விரும்பவில்லை என்றால், கட்டணம் திரும்ப அளிக்கப்படும்; சந்தேகம் இருந்தால் +91 1169329333 / +91 1169329999 (ஏர் இந்தியா), +91 124 6935600 (ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம்; பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அவர்களின் விருப்பத்தின் படி, பயணத்தைத் தொடர உதவுவது எங்கள் நோக்கமாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.