📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 12, 2026 06:00 AM

போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி

போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடரும் என, கரப்பான்பூச்சி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கரப்பான்பூச்சி கட்சியின் நிர்வாகிகள் டில்லியில் நேற்று அளித்த பேட்டி:

போராட்டங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், போராட்டங்கள் நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. எங்களுடைய போராட்டம் டில்லியில் மட்டுமல்ல, நாடு முழுதும் விரிவடைந்துள்ளது.

அரசின் நெருக்கடிகளுக்கு அஞ்ச மாட்டோம். போராட்டம் நடத்த மாட்டோம் என்று நாங்கள் எந்த பத்திரத்திலும் கையெழுத்து போட்டுத் தரவில்லை. எங்களுடைய போராட்டம் தற்போதுதான் துவங்கியுள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்து நீக்கப்படும் வரை, எங்களுடைய போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

டில்லி போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி கரப்பான்பூச்சி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே, அவரது சக கூட்டாளிகளான சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோரை தடுப்புக் காவலில் இருந்து விடுவித்தனர்.

அப்போது போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த மூவரையும் அழைத்துச் செல்ல அவரது ஆதரவாளர்களோ, தொண்டர்களோ யாருமே வரவில்லை. மூவரும் தனியாகவே காரில் ஏறி புறப்பட்டனர்.

டில்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் அனுமதி மீறி ஒன்றுகூடியது தொடர்பாக, 20க்கும் மேற்பட்ட எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு