📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 12, 2026 08:04 AM

ஜேமஸ் லிம் நியூமோனியாவால் மருத்துவமனையில்

ஜேமஸ் லிம் நியூமோனியாவால் மருத்துவமனையில்

சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் செங்காங் குழுத்தொகுதி நடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம்மின் உடல்நலம் பாதிக்கப்பட்டதுபோல் தெரிந்தது.

அதைத் தொடர்ந்து அவர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்ஃபுளுவென்ஸா ஏ வகை சளிக்காய்ச்சலுக்கு ஆளானதைத் தொடர்ந்து திரு லிம் நியூமோனியா காய்ச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.

திரு லிம், முதலில் சென்ற வாரத்தின் எஞ்சிய பகுதி மட்டுமே ஓய்வெடுக்கத் திட்டமிட்டிருந்தார் என்று பாட்டாளிக் கட்சி திங்கட்கிழமை (அக்டோபர் 12) காலை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. எனினும், தமது ரத்தத்தில் உயிர்வாயுவின் அளவு குறைந்ததையடுத்து மருத்துவமனையில் சேர்ந்துகொள்ள வேண்டியிருந்ததாக திரு லிம் கூறியுள்ளார்.

தாம் மருத்துவமனையில் இருக்கவுள்ள காலத்தை அவர் தமது பதிவில் குறிப்பிடவில்லை.