📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 13, 2026 04:04 AM

பிக்பாஸ் முத்துக்குமரன் பிரச்னை.. சீனுக்குள் வந்த விஜே பார்வதி.. விஜய் சேதுபதியையும் விடவில்லை!

பிக்பாஸ் முத்துக்குமரன் பிரச்னை.. சீனுக்குள் வந்த விஜே பார்வதி.. விஜய் சேதுபதியையும் விடவில்லை!

சென்னை: பிக்பாஸ் முத்துக்குமரன் தன்னை ஏமாற்றிவிட்டதாக வஹிதா என்ற பெண் போட்ட வீடியோ சென்சேஷனல் ஆனது. விளையாட்டுக்கு பேசியதை தவறாக பயன்படுத்திவிட்டார் என்று முத்து புகார் அளித்தாலும்; இதில் அவர் இமேஜ் டேமேஜ் ஆகிவிட்டது என்பதுதான் எதார்த்தம். இந்நிலையில் விஜே பார்வதியும் முத்துக்குமரனை அட்டாக் செய்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் ஓரளவுக்கு பிரபலமாக இருக்கும் வஹிதா என்ற பெண் சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், "முத்துக்குமரன் என்னை அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது அவர் எனக்கு ஆயிரக்கணக்கான முத்தங்களை கொடுத்தார். மேலும் தாலி கட்டுவதாகவும் உறுதி கொடுத்தார். என்னுடன் உடலுறவும் வைத்துக்கொண்டார்" என்று தெரிவித்திருந்தார். அதோடு மட்டுமின்றி, தற்கொலை முயற்சியும் செய்துகொண்டதாக தெரிகிறது.

புகார் அளித்த முத்துக்குமரன்: வஹிதாவின் வீடியோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்த அவர், 'நானும் அந்தப் பெண்ணும் நல்ல நண்பர்கள்தான். ஏன் இப்படி செய்தார் என்று கிளாரிட்டி கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர் கொஞ்சம் டிஸ்டர்பாக இருந்தார்' என்று சொன்னார். அதனையடுத்து வெளியான இன்னொரு வீடியோவில், 'நான் வஹிதாவுக்கு பார்ட் டைம் பாய் ஃப்ரெண்டாக அப்ளை செய்கிறேன்' என பேசிய காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

அதைப் பார்த்து மேலும் ஷாக்கான அவர்,'அது விளையாட்டுக்கு பேசிய வீடியோ.. அதை தவறாக பயன்படுத்துகிறார்' என சொல்லி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதனால் மேலும் ட்ரிக்கர் ஆன வஹிதா,முத்துக்குமரனோடு பேசிய ஆடியோவையும் லீக் செய்தார்.அந்த ஆடியோவில் முத்துக்குமரனை அவர் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியிருந்தார். இந்தச் சம்பவம்தான் கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது.

டேமேஜ் ஆன இமேஜ்: முத்துக்குமரன் மீது இந்த விஷயத்தில் தவறு இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் ரசிகர்களால் இரண்டாம் பட்சமாகத்தான் பார்க்கப்படுகிறது. அவர் பெண்ணை ஏமாற்றிவிட்டார் என்ற பிம்பம் அவரது இமேஜை டேமேஜ் ஆக்கிவிட்டது என்றும் சொல்லலாம். ரசிகர்கள் மட்டுமின்றி பிரபல பாடலாசிரியர் தாமரையும் தனது முகநூல் பக்கத்தில் காட்டமான நீண்ட பதிவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் விஜே பார்வதியும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார்.

விஜே பார்வதி போஸ்ட்: அதாவது இன்ஸ்டாவில் முத்துக்குமரன் மற்றும் விஜய் சேதுபதியின் புகைப்படத்தை பகிர்ந்து, "இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 வின்னர்தானே அன்றைக்கு நமக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று பேசினார். சரியான தேர்வு. போலி வெற்றியாளரும், அவருடன் நல்ல மனிதர் என்ற இமேஜ் பில்டிங்கும்' என குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் சீனுக்குள் வந்த பார்வதி விஜய் சேதுபதியையும் கோர்த்துவிடுகிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.