📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion October 13, 2026 05:03 AM

கன்னியாகுமரி: காதல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை

கன்னியாகுமரி: காதல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை

நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே காதல் தொந்தரவால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் வாலிபரை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் தொல்லை

கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தை அடுத்த பெரியவிளையை சேர்ந்தவர் ஞானசெல்வம். முன்னாள் ராணுவ வீரரான இவருடைய மகள் ஏஞ்சல் (26 வயது). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவரை அதே பகுதியை சேர்ந்த ஆன்டனிராஜ் (30 வயது) என்பவர் கடந்த ஓராண்டாக காதலிக்கும்படி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி ஏஞ்சலின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். பின்னர் போலீசார் ஆன்டனிராஜை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.

ஆனாலும் அவருடைய அத்துமீறல் அதிகரித்தது. பல வகையில் ஏஞ்சலுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஏஞ்சல் நேற்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது தற்கொலை ஆன்டனிராஜ் மீது அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

வாலிபர் கொலை

இதையடுத்து அவர்கள் ஆன்டனிராஜை சரமாரியாக அடித்துக் கொன்றனர். இதுகுறித்து தகவலறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ஆன்டனிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.