📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 06, 2026 09:03 AM

பிக்பாஸ் 10 முதல் எவிக்‌ஷன்

பிக்பாஸ் 10 முதல் எவிக்‌ஷன்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் இன்றிலிருந்து தொடங்கவிருக்கிறது. இந்த முறை 20 செலிபிரிட்டிகளுடன் மூன்று காமன் மேன்களும் செல்லவிருக்கிறார்கள். எனவே போட்டி களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சீசனில் பிரசாந்த் முதல் ஆளாக எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அதுகுறித்து மனம் திறந்திருக்கிறார் அவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் எக்கச்சக்க பேர் ரசிகர்கள். 100 நாட்களும் இரவில் என்ன வேலை இருந்தாலும் இந்த நிகச்சியை பார்த்து ரசிப்பார்கள். போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு கன்டென்ட் கொடுப்பார்கள். கடந்த சில சீசன்களாக விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்குகிறார். அந்தவகையில் பிக்பாஸ் 10 நிகழ்ச்சியையும் சேதுதான் தொகுத்து வழங்குகிறார். இன்றிலிருந்து ஒளிபரப்பாகவிருக்கிறது நிகழ்ச்சி.

காமன் மேன்: இத்தனை வருடங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களும்; நிகழ்ச்சியில் பங்கேற்கும்படியான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கான ஆடிஷன் கடந்த சில வாரங்களாக நடைபெற்றன. ஆரி, ஓவியா, ராஜு, வனிதா உள்ளிட்டோர் எல்லாம் நடுவர்களாக செயல்பட்டார்கள். அப்போது பங்கேற்றவர்களை அவர்கள் நடத்திய விதம் விமர்சனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

போட்டியாளர்கள் லிஸ்ட்: இந்த சீசனில்,குமரன் தங்கராஜ், புவியரசு, பிளாக் பாண்டி, நவீன் குமார், பிரசாந்த் ரங்கசாமி, வினோத் பாபு, குக் வித் கோமாளி முகமது அன்சார், லட்சுமி பிரியா, தன்யா பல்லத், யோகினி கவிதா மோகன், ஷபி ஷப்னம் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்கவிருப்பதாக தெரிகிறது. இவர்களுடன் மொத்தம் மூன்று காமன் மேன்களும் வீட்டுக்குள்ளே செல்கிறார்கள். மொத்தம் 23 போட்டியாளர்கள் இந்த சீசனில் இருக்கிறார்கள்.

எப்படி இருக்கும்?: இம்முறை வீட்டிலும் பல மாற்றங்கள் நடந்திருக்கின்றன. வீட்டில் மட்டுமின்றி நிகழ்ச்சியின் விதிகளிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று தெரிகிறது. கடந்த சீசன் பல சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்தது. அந்த மாதிரி இம்முறை எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் நிகழ்ச்சி குழுவினர் முழு கவனத்தோடு இருக்கிறார்களாம். இன்று மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சியானது பிரமாண்டமாக தொடங்கவிருக்கிறது.

பிரசாந்த் எவிக்ட்?: சூழல் இப்படி இருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் நிகழ்ச்சி ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே நடிகை ஷபி ஷப்னமும், திரை விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமியும் எவிக்ட் செய்யப்பட்டுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த சீசனில் சச்சனா 24 மணி நேரத்தில் எவிக்ட் ஆனார். இப்போது அதைவிட குறைவான நேரத்தில் இவர்கள் எவிக்ட் ஆகியிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இதுகுறித்து பிரசாந்த் ரங்கசாமி மனம் திறந்திருக்கிறார்.

பிரசாந்த் பதிவு: எவிக்‌ஷனுக்கு பிறகு பேசிய அவர், " பிக்பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியுடன் மேடையை பகிர்ந்துகொண்டதை மகிழ்ச்சியுடன், நன்றியுடன் நினைவுகூர்கிறேன். நான் நன்றாகத்தான் நடந்துகொண்டேன். எந்த விதியையும் மீறவில்லை. கடைசி நிமிடம்வரை என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாகத்தான் விளையாடினேன். பேட் எடுக்காமலேயே அவுட் ஆகிவிட்டேன். எனவே என்னிடம் எந்த பதிலும் இல்லை. இது வெறும் கேம் ஷோ மட்டும்தான்" என்றார்.

மேலும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், 'அனைவரும் கொடுத்த அன்புக்கும், வெறுப்புக்கும் நன்றி. இப்போது மீண்டும் வேலைக்கு திரும்புகிறேன். எந்த வருத்தமும் இல்லை ஏமாற்றமும் இல்லை. நடந்தது நடந்ததுதான்" என பதிவிட்டிருக்கிறார்.