நவராத்திரி கொலுவிற்காக விதவிதமான பொம்மைகள்
பெரியகுளம்: நவராத்திரியையொட்டி வீடுகள், கோயில்கள், கல்வி நிறுவனங்களில் கொலு வைக்கப்படுகிறது. நவராத்திரி கொலுவிற்காக பெரியகுளம் சர்வோதய காதிபவனில் ஏராளமான பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.அக்.,11 முதல் நவராத்திரி விழா துவங்குகிறது. தொடர்ந்து 9 நாட்கள் நடக்கும் நவராத்திரி விழாவில் வீடு, கோயில்கள், கல்வி நிறுவனங்களில் நவராத்திரி கொலு வைக்கப்படும். கொலு வைப்பதினால் வீடுகளில் ஐஸ்வர்யம் கிடைக்கும், அதில் பங்கெடுப்பவர்களுக்கும் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்பது ஐதீகம். இதனால் ஆண்டுக்கு ஆண்டு கொலு வைக்கும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பெரியகுளம் சர்வோதய காதி பவனில் சரஸ்வதி, மகாலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி உட்பட அம்மன் கொலு பொம்மைகள், சிவன், விநாயகர், முருகன், ஐயப்பன், ஆழ்வார்கள், சித்தர்கள், கும்பகர்ணன், மாயாபஜார் பொம்மைகள் உட்பட ஏராளமான பொம்மை வகைகள் வந்துள்ளது. மேலாளர் சண்முகவேல் கூறுகையில், ‘கடந்த ஆண்டு கொலு பொம்மைகள் வியாபாரம் ரூ.1.50 லட்சத்தை தாண்டியது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் விற்பனையை முந்தும். ரூ.80 முதல் ரூ.5 ஆயிரம் வரை கொலு பொம்மைகள் உள்ளது. இவைகள் திருச்சியிலிருந்து வந்துள்ளது,’ என்றார்.
கோவை; காரமடை அருகே கா.புங்கம்பாளையத்தில் உள்ள திம்மராய ...
கோவை ; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி ...
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், ...
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை ...
ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அடுத்த செரப்பனஞ்சேரியில், ...
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா ...