மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
பதிவு செய்த நாள்
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆன்மிகம், கலாசார நிகழ்வை நினைவுகூரும் வகையில் அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை நேற்று வெளியிடப்பட்டது. கோயில் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் தென் மண்டல அஞ்சல் துறை இயக்குநர் நீரஜ், சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் பெற்றுக்கொண்டார். இணை கமிஷனர் செல்லத்துரை, உதவி கமிஷனர் மெய்வேல், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செல்லையா, சீனிவாசன், சுப்புலட்சுமி, மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நீரஜ் பேசுகையில், "மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக அஞ்சல் உறை வெளியிட்டது, மதுரையின் மிகவும் போற்றப்படும் ஆன்மிக, கலாச்சார அடையாளங்களுக்கு செலுத்தும் சிறப்பான மரியாதையாக இருக்கும்" என்றார்.தபால் துறை தென் மண்டல உதவி இயக்குநர்கள் பொன்னையா, செந்தில்குமார், சுதா, முதுநிலை கண்காணிப்பாளர் சீனிவாசராவ், முதுநிலை அஞ்சல் அலுவலர் மாரியப்பன் பங்கேற்றனர்.