📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 20, 2026 08:04 PM

இரண்டாவது குழந்தையை வரவேற்ற தீபிகா

இரண்டாவது குழந்தையை வரவேற்ற தீபிகா

மும்பை: பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதியினருக்கு சனிக்கிழமை செப்டம்பர் 19ந் தேதி அன்று இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்த சந்தோஷமான செய்தியை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிஞ்சு குழந்தையின் கால் பாதத்தை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

காதல் திருமணம்: தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் ராம்-லீலா படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்க தொடங்கினார்கள். அதன்பின், பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் படத்தில் நடித்தனர். இந்த இரண்டு படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. காதலர்களான இவர்கள் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் படங்களில் கவனம் செலுத்தி நடித்தனர். அதன்பின் 6 ஆண்டுகள் கழித்து இந்த ஜோடிக்கு, கடந்த 2024 செப்டம்பர் 8ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைகக் 'துஆ' என பெயர் வைத்தனர்.

இரண்டாவது குழந்தை: இதையடுத்து, தீபிகா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து மகள் துஆவின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு, கர்ப்பகால பிளாக் அண்ட் வொயிட் போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில், தீபிகா, ரன்வீர் சிங் தம்பதியினருக்கு இரண்டாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சந்தோஷமான செய்தியை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிஞ்சு குழந்தையின் கால் பாதத்தை பகிர்ந்து அறிவித்துள்ளனர். திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் இந்த தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

சித்துவிநாயகர் கோயில்: குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை ரன்வீர் சிங்கின் பெற்றோர் மற்றும் கணவர் ரன்வீருடன் தீபிகா படுகோன் மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்துவிநாயகர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தீபிகாவின் முதல் குழந்தை 'துஆ (Dua)' பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் இதே சித்துவிநாயகர் கோயிலுக்குச் சென்று இவர்கள் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.