பிரதமரின் வெற்று வாக்குறுதியால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு
பிரதமரின் வெற்று வாக்குறுதியால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்திருப்பதாவது;-
வேலையில்லாத் திண்டாட்டம்
2014-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு, ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை அள்ளி தருவோம் என்று இளைஞர்களிடம் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி ஆட்சிக்கு வந்து 12 ஆண்டுகளாகியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 12 ஆண்டுகளில் 24 கோடி பேருக்கு கொடுத்த வாக்குறுதியின்படி வேலை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் தலைவிரித்தாடுகிறது.
விளம்பர அரசியல்
கடந்த ஆகஸ்ட் 2026 இல் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை மற்றும் தொழிற்பயிற்சி எதுவுமின்றி முடங்கியுள்ளனர் என்பதும், 79.6 கோடி பேர் உழைக்கும் சந்தைக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் அதிகாரப்பூர்வமாக அம்பலமானது. படித்த பட்டதாரிகளில் வெறும் 8.25 சதவிகித பேருக்கு மட்டுமே தகுதிக்குரிய வேலை கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலும், பட்டம் பெற்ற பெண்களிடம் 20.4 சதவிகித வேலையின்மை நிலவுவதும் மோடி அரசின் விளம்பர அரசியலின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
சமூக-பொருளாதார நெருக்கடி
எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது
நிர்வாக தோல்வி
வேலைவாய்ப்புகளை உருவாக்க தவறிவிட்டது
இந்திய இளைஞர்கள்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.