📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 11, 2026 07:03 AM

எம்ஜிஆரை வைத்து ஏ.ஐ. வீடியோ வெளியிடுவதா?: அதிமுக மாஜி அமைச்சர் கண்டனம்

எம்ஜிஆரை வைத்து ஏ.ஐ. வீடியோ வெளியிடுவதா?: அதிமுக மாஜி அமைச்சர் கண்டனம்

எம்ஜிஆரை வைத்து ஏ.ஐ. வீடியோ வெளியிடுவதா?: அதிமுக மாஜி அமைச்சர் கண்டனம்

மதுரை: மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று மாலை, நிருபர்களிடம் கூறியதாவது:

சட்டமன்ற தேர்தலில் கன்டென்ட் கிரியேட்டர் மூலம் பேக் வீடியோ ரூட் மீடியா மூலம் வெளியானது. தற்போது எம்ஜிஆர், விஜயை வாழ்த்துவது போல ஒரு போலியான ஏஐ வீடியோவை தவெகவினர் வெளியிட்டுள்ளனர். அதில் எம்ஜிஆர், விஜயை பார்த்து, ‘‘தொண்டர்களை பார்த்து கொள்ளுங்கள்’’ என்றும், தலைமைச் செயலகத்திற்கு விஜயை அழைத்து செல்வது போலவும் வெளியிட்டுள்ளார்கள். இது மக்களை ஏமாற்றும் செயலாகும். எம்ஜிஆர், விஜய் இருவருக்கும் என்ன தொடர்பு? விஜய் எப்போதாவது எம்ஜிஆரை சந்தித்துள்ளாரா? ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் தனது படம் வெளியிடுவதற்காக காத்திருந்தார்.

போலியான வீடியோவை ஒரு முதல்வரே, இப்படி ஒரு போர்ஜரி, 420 சீட்டிங் வேலையை செய்யலாமா? இந்த வீடியோ முதலமைச்சருக்கு தெரிந்து வெளியிடப்பட்டதா? அல்லது தெரியாமல் வெளியிடப்பட்டதா? இதற்கு அனுமதி பெறப்பட்டதா அல்லது அனுமதி இல்லாமல் வெளியிடப்பட்டதா?

நான்தான் எம்.ஜிஆர் என்கிறார். எம்ஜிஆரின் கால் தூசிக்கு கூட யாரும் இணையாக முடியாது. எம்ஜிஆர் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் உள்ளோம். உங்களுக்குத்தான் கொள்கை தலைவர் உள்ளார்களே? எங்க பாஸை ஏன் உங்க பாஸ் என்று கூறுகிறீர்கள்? இந்த கீழ்த்தரமான அரசியலை இத்துடன் தவெக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்று வீடியோ வேண்டாம் என்று எச்சரிக்கையாக செல்கிறோம்.

அதிமுக சீனியர்களை பதவி ஆசைகாட்டி அழைத்தனர், அதிகாரத்தை வைத்து மிரட்டினார்கள், காவல்துறையினரை வைத்து பொய் வழக்கு போட்டனர். டிபன் பாக்ஸில் பணம் வைத்து கொடுத்து தாராபுரம் பார்முலா என ஒன்றை உருவாக்கி விட்டனர். முதல்வர் ஆகும் வரை விஜயின் கால் தரையில் படவில்லை. ஆனால், இப்போது முருங்கைக்காய் பறிக்கும் நிலைக்கு ஆளானார். தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் தவெக செல்கிறார்கள். செல்லட்டும். ஆனால், தன்னை வளர்த்து ஆளாக்கிய கட்சியை அழிக்க நினைக்கிறார்கள். அதிமுக தொண்டனின் வயிறு எரிகிறது. நேற்று முளைத்த காளான் தவெக, உங்களால் அது முடியாது.

அதிமுகவில் அதிருப்திக்கு உள்ளான நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி ஆகியோருக்கும் முக்கியத்துவம் அளித்து, அதிமுக துவக்க விழா பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எந்த முடிவுகளையும் எடப்பாடி எடுப்பார். நான் தான் பாஸ் என்று சொல்லும் விஜய் 50 % வாக்குகள் அல்லவா வாங்கியிருக்க வேண்டும். ஆனால், தவெக 35 மார்க் வாங்கி ஜஸ்ட் பாஸ் ஆனதால் தான் அதிமுகவை அபகரிக்க பார்க்கிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.