CM Vijay: லண்டனில் அஜித்
சென்னை: தமிழக அரசியல் மற்றும் தமிழ் சினிமா வட்டாரம் என இரண்டையுமே ஒரே நேரத்தில் அதிர வைக்கும் ஒரு தரமான சம்பவம் ஒன்று தற்போது நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும் கார் பந்தய வீரருமான அஜித்குமாரும் லண்டனில் சந்தித்துக்கொள்ளப்போவதாக சோஷியல் மீடியாவில் செய்தி வெளியாகி புயலை கிளப்பியுள்ளது.
தமிழக முதல்வர் அஜித்: தமிழகத்திற்கான புதிய தொழில் முதலீடுகள், தொழில்முனைவோருடனான பேச்சுவார்த்தை மற்றும் முக்கிய ஒப்பந்தங்கள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை அரசு சார்ந்த மற்றும் தொழில்முறை பயணமாக லண்டன் செல்ல உள்ளார். அதே நேரம், லண்டனில் வசித்து வரும் தனது மனைவி சங்கீதாவை சந்திக்க இருப்பதாகவும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
தல,தளபதி சந்திப்பு: அதே போல செப்டம்பர் 11 மற்றும் 12ந் தேதி லண்டனில் உள்ள உலகப்புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெறும் 'Michelin Le Mans Cup 2026' சர்வதேச கார் பந்தயத்தில் 'Ajith-RedAnt Racing' டீம் சார்பில் அஜித்குமார் களம் இறங்குகிறார். இந்த சூழலில்தான், லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய், அஜித்தின் இந்த கார் பந்தயத்தை பார்வையிட்டு, அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
ஒரே ஃபிரேமில் அஜித், விஜய்: தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் - அஜித் இருவரும் சந்திக்கும் முதல் நிகழ்வாக இது அமையக்கூடும் என்பதால், இருதரப்பு ரசிகர்களும் இணையத்தில் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர். பாக்ஸ் ஆபீஸ் போட்டியாளர்களாக இருந்த இரு பெரிய ஆளுமைகள், லண்டன் மண்ணில் சந்தித்து பேசினால் அது சினிமா எல்லையை தாண்டி அரசியல் ரீதியாகவும் பெரிய விவாதமாக மாறும். ஆனால், இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகத்திலிருந்தோ, அஜித்தின் தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.