📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 23, 2026 03:01 PM

சாமுண்டீஸ்வரியை கொல்ல சந்திரகலா போடும் ஸ்கெட்ச்.. பழியை கார்த்தி மேல போட பிளான்.. கார்த்திகை தீபம்!

சாமுண்டீஸ்வரியை கொல்ல சந்திரகலா போடும் ஸ்கெட்ச்.. பழியை கார்த்தி மேல போட பிளான்.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதி கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்க வேண்டும், கார்த்தி அந்த ஊரில் தலைநிமிர்ந்து இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் அங்கு வந்திருக்கிறார். ரேவதி வீட்டிற்குள் வந்ததிலிருந்து சந்திரகலா கடுமையான ஆத்திரத்தில் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், சிவனாண்டி கும்பாபிஷேகத்தை நடத்த போகிறார் என்று சந்திரகலா ரேவதியிடம் சவால் விட்டிருந்தார்.

கார்த்திகை தீபம்: ஆனால் அந்த சவாலையே முறியடிக்கும் வகையில் ரேவதி வீட்டிற்கு வந்து, கும்பாபிஷேகத்தை கார்த்திக் மாமா தான் நடத்த வேண்டும் என்று கூறுகிறார். இதையடுத்து சாமுண்டீஸ்வரியும் கலெக்டரிடம் பேசி கோயிலை திறந்து, கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிடுகிறார். இதனால் சந்திரகலாவுக்கும் சாமுண்டீஸ்வரிக்கும் ரேவதி மீது கடும் கோபம் ஏற்பட்டிருக்கிறது.

கோவப்பட்ட கார்த்தி: இதற்கிடையில் ரேவதி, கார்த்திக்கை பற்றி யோசித்து கொண்டிருக்கிறார். மாமா இந்த நேரம் வீட்டிற்கு வந்து இருப்பாரு... என்னை பற்றி தான் யோசிச்சுட்டு இருப்பாரு என்று நினைத்து கொண்டிருக்கும்போது, கார்த்தி ரேவதிக்கு போன் செய்கிறார். உடனே ரேவதி, மாமா, நான் உங்களை பற்றித்தான் நினைச்சுட்டு இருந்தேன். உங்களுக்கு நூறு ஆயுசு என்று சொல்ல, இதை கேட்டு கார்த்தி கோபப்படுகிறார். எதுக்கு இந்த வேலைகளையெல்லாம் செஞ்ச? என்று கேட்கிறார். அதற்கு ரேவதி, மாமா, நீங்க ஊர்ல தலைமை இருக்கிற ஆளு. என்னால உங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் வரக்கூடாது. அதுக்காகத்தான் நான் இங்கே வந்து இருக்கேன். நீங்க கும்பாபிஷேகத்தை நல்லபடியா நடத்துங்க என்கிறார்.

சாமுண்டீஸ்வரியின் திட்டம்: அதன்பிறகு ரேவதி சாப்பிட செல்கிறார். அப்போது தான் சாப்பிடும் போட்டோவை எடுத்து கார்த்திக்கிற்கு அனுப்பிவிட்டு, கார்த்திக் மாமா சொன்னதுனால தான் நான் சாப்பிட வரேன் என்று சொல்கிறார். இதை கேட்டு சாமுண்டீஸ்வரி கடும் ஆத்திரமடைகிறார். உடனே தனது அறைக்குள் சென்று அங்கிருந்த பொருட்களை எல்லாம் தூக்கிப்போட்டு உதைக்கிறார் சாமுண்டீஸ்வரி. அந்த கார்த்திக் சொன்னது போலவே இவ விருப்பப்பட்டு வரல... கும்பாபிஷேகம் நல்லபடியா நடக்கணும் என்பதற்காகத்தான் இங்க வந்திருக்கா"என்று ரேவதி மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

நடக்கக்போகும் விபரீதம்: இந்த நேரத்தில் சந்திரகலா வந்து, சாமுண்டீஸ்வரியிடம், நாளைக்கு ஒரு பிளாட் நம்ம பார்க்க போகணும். காலையிலேயே ரெடியாயிருங்க என்று சொல்கிறார். ஆனால், இதற்கு பின்னால் சந்திரகலா ஒரு பெரிய திட்டத்தையே வைத்திருக்கிறார். உடனே தன்னுடைய கணவர் சிவனாண்டிக்கு போன் செய்து, நாளைக்கு அக்காவை பிளாட் பார்க்க கூட்டிட்டு வருவேன். அந்த இடத்துல வச்சு அவங்களோட கதையை முடிச்சிட்டு, அந்த பழியை கார்த்திக் மேல போடணும் என்று சொல்கிறார். இதையடுத்து சிவனாண்டி சில ரவுடிகளை ஏற்பாடு செய்து, சாமுண்டீஸ்வரியின் போட்டோவை அவர்களிடம் காட்டி கொல்ல ஏற்பாடு செய்கிறார். சந்திரகலாவின் இந்த திட்டத்தில் கார்த்திக் எப்படி சிக்கப் போகிறார் என்ற பரபரப்பு உருவாகியுள்ளது.