📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 19, 2026 06:33 PM

அண்ணா அறிவாலயத்தில் பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதிநாள் உறுதி ஏற்பு

அண்ணா அறிவாலயத்தில் பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதிநாள் உறுதி ஏற்பு

அண்ணா அறிவாலயத்தில் பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதிநாள் உறுதி ஏற்பு

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதி ஏற்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் பெரியாரின் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நடைபெறுகிறது.

அதேபோன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திலும் ஆண்டுதோறும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா எம்பி, முன்னாள் அமைச்சர்கள் சேகர்பாபு, பொன்முடி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சமூக நீதி நாள் உறுதிமொழியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாசித்தார். அதை கட்சியினர் சொல்லி உறுதிமொழி ஏற்றனர்.