📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 13, 2026 02:01 PM

அனிருத்திடம் இருக்கும் அந்த பழக்கம்.. உடம்புக்கு நல்லது இல்லனு சொல்லியும் கேட்கல.. தந்தை பேட்டி!

அனிருத்திடம் இருக்கும் அந்த பழக்கம்.. உடம்புக்கு நல்லது இல்லனு சொல்லியும் கேட்கல.. தந்தை பேட்டி!

சென்னை: தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தின் 'வை திஸ் கொலவெறி டி' பாடல் மூலம் ஒட்டுமொத்த உலகத்தையே தன் இசைக்கு ஆடவைத்தவர் அனிருத் ரவிச்சந்தர். இன்று தமிழ், தெலுங்கு, பாலிவுட் வரை கொடிகட்டிப் பறக்கும் அவர், அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் 'AA23' படத்திற்கு ரூ. 23 கோடி முதல் ரூ. 25 கோடி வரை சம்பளமாக பெற்று இந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.

அனிருத் தந்தை: இந்நிலையில், அனிருத்தின் விசித்திரமான வேலை செய்யும் முறை குறித்து அவரது தந்தையும் நடிகருமான ரவி ராகவன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், உலகமே தூங்கும்போது அனிருத் முழித்துக்கொண்டிருப்பார், எல்லாரும் முழித்துக்கொண்டு வேலை செய்யும்போது அவர் தூங்குவார். எல்லாவற்றிற்கும் அவர் முற்றிலும் எதிர்மறையான பழக்கம் கொண்டவர். உண்மையைச் சொல்லப்போனால் நீண்ட கால இப்படி செய்தால் அது உடல்நலத்திற்கு நல்லது கிடையாது. ஆனால், அதுதான் அவருடைய ஸ்டைல் என்பதை நான் போகப் போகப் புரிந்துகொண்டேன்.

கேள்வி கேட்க முடியாத காரணம்: அவரால் இப்படி வேலை செய்வதன் மூலம் தான் ஒரு வெற்றிகரமான மியூசிக் வெளியீட்டை கொடுக்க முடிகிறது. அவர்களுடைய கிரியேட்டிவ் சிந்தனையின் மூலம் சிறந்த முடிவுகளை உருவாக்க முடிகிறது. அப்படி இருக்கும்போது ஒரு தந்தையாக என்னால் அவர்களிடம் சென்று கேள்வி கேட்க முடியவில்லை.

ரூ 25 கோடி சம்பளம்: அவருடைய கிரியேட்டிவ் சிந்தனை என்பது சாதாரண மனிதர்களை விட முற்றிலும் வேறுபட்டது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சார் கூட இரவில் பணிபுரியும் இந்த ஸ்டைலைப் பற்றி சொல்லியிருக்கிறார். இரவில் இருக்கும் அமைதியான சூழ்நிலை, அதனால் அந்த சமயத்தில் அவர்களுக்கு என்ன தேவையோ, அதை உணர்ந்து அமைதியாக இருக்க வேண்டிய சூழல் இருக்கும். அதனால்தான் நானும் கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்து அவரை ரசிக்கிறேன். ரூ.25 கோடி சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திர இசையமைப்பாளராக உயர்ந்ததற்கு அனிருத்தின் நள்ளிரவு இசை அமைப்பது தான் என அவரது தந்தை நெகிழ்ச்சியோடு அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.