ஆயுத பூஜை நாளில் உயர்ந்த தங்கம் விலை
ஆயுத பூஜை நாளில் உயர்ந்த தங்கம் விலை - இன்று சவரனுக்கு ரூ. 280 அதிகரிப்பு
வெள்ளி இன்று ஒரு கிராம் ரூ. 240க்கும், ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Published : October 19, 2026 at 10:30 AM IST
சென்னை: ஆயுத பூஜை நாளான இன்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,08,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையானது கடந்த வாரம் முழுக்க தொடர்ந்து இறங்கி நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், தங்கம் விலை மேலும் குறையுமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? என்ற குழப்பத்தில் நகை வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்நிலையில் தங்கம் வாங்க திட்டமிடுவோர் இந்த சமயத்தில் வாங்கலாம் என நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஏனெனில் அமெரிக்க ஃபெடரல் வங்கி மேலும் வட்டி விகிதத்தை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை இப்போதைக்கு ஏற வாய்ப்பில்லை என்கின்றனர். எனினும், இந்த சரிவு தற்காலிகமானது தான் என்றும் கூறுகின்றனர் நிபுணர்கள்.
இன்று (அக்டோபர் 19) திங்கட்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் #goldrate | #goldprice| #silverrate | #goldsilverrate | #goldrateupdate | #EtvBharatTamilNadu https://t.co/OR9UKlnTuX
சனிக்கிழமை (அக்டோபர் 17) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 அதிகரித்து ரூ. 13,535க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று ரூ. 35 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 13,570க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ரூ. 1,08,280க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 280 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,08,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 13,570
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,08,560
வெள்ளி ஒரு கிராம் - ரூ. 240
வெள்ளி ஒரு கிலோ - ரூ. 2,40,000
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை
அக்டோபர் 15ஆம் தேதி வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 240க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து ரூ. 2,240,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து 4 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.