Business
September 16, 2026 05:32 AM
‘ஆன்லைன்’ வணிகம் நிறுத்தணும் பொதுக்குழுவில் வலியுறுத்தல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகா மருந்து வணிகர்கள் நல சங்க பொதுக்குழு கூட்டம், தொழில் வர்த்தக சபை கட்டட வளாகத்தில் நடந்தது. தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார்.
கோவை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் செல்வம், நிர்வாகிகள் திருநாவுக்கரசு, மகேந்திரன் முன்னிலை வகித்தனர். மேட்டுப்பாளையம், சூலுார், வால்பாறை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம், கூட்டங்கள் நடத்தி போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க மருந்து வணிகர்கள் நல சங்கம் உறுதுணையாக இருக்கும்.
‘ஆன்லைன்’ மருந்து வணிகத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். நலிவுற்றோருக்கு நல உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி பாண்டியன் நன்றி கூறினார்.