📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 14, 2026 10:04 AM

10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு

10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு

10, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் பொதுத் தேர்வுக்கு தயாராகுவதற்கு ஏதுவாக, அவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை தேர்வுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியிடப்படும். அந்த வகையில் 2026-27ம் கல்வியாண்டுக்கான 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? என மாணவர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில், 2027ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுகால அட்டவணை நாளை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நாளை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டவுடன், பாடவாரியான தேர்வு தேதிகள் மற்றும் செய்முறைத் தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அரசுத் தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

கடந்த ஆண்டிற்கான பொதுத்தேர்வு, மார்ச் 2-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பிற்கும், மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை 10-ஆம் வகுப்பிற்கும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.