📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology October 09, 2026 07:00 PM

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குறிப்பிட்ட கார் பாதைகளில் மோட்டார்சைக்கிள்கள் செல்ல அனுமதி, சிங்க‌ப்பூர் செய்திகள்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குறிப்பிட்ட கார் பாதைகளில் மோட்டார்சைக்கிள்கள் செல்ல அனுமதி, சிங்க‌ப்பூர் செய்திகள்

இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து (அக்டோபர் 15) சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியிலிருந்து வெளியேறும் மோட்டார்சைக்கிள்கள்கள் குறிப்பிட்ட கார் பாதைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

இந்தப் பாதைகளில் பயணிகளைத் தானாகச் சரிபார்த்து அனுமதியளிக்கும் முக அடையாளத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இந்த வசதியை அனைத்துச் சிங்கப்பூர் வாசிகளும் நீண்டகால அனுமதிச் சீட்டு வைத்துள்ளவர்களும் சிங்கப்பூருக்குள் நுழைந்த வெளிநாட்டுப் பயணிகளும் பயன்படுத்தலாம் என்று குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் (ஐசிஏ) தனது ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்தப் பாதைகளின் வழியாகச் செல்ல ஏறக்குறைய 10 விழுக்காடு நேரம், அதாவது ஒரு மோட்டார் சைக்கிளுக்கு இரண்டு வினாடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐசிஏ கூறியுள்ளது.

ஒவ்வொரு பாதையிலும் ஓர் ஐசிஏ அதிகாரி இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் கூடுதல் பாதைகளை இயக்க முடியும் என்பதால் குறிப்பாக நெரிசல் மிகுந்த நேரங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் குடிநுழைவு சோதனைகளை விரைவாக முடிக்க இந்த முயற்சி உதவும் என்றும் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்பவர்களுக்கான முக அடையாளச் சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது. சோதனைச் சாவடியின் வருகைப் பக்கமாக உள்ள 18 தானியங்கி பாதைகளில் இந்த சிறப்பு அம்சம் செயல்படுத்தப்பட்டது.