உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 09) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 09) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை புதன்கிழமை (செப்டம்பர் 09) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோயம்புத்தூர் மாவட்டம்: பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணார்பாளையம் ரோடு.
உடுமலைபேட்டை: கோட்டமங்கலம், பொன்னேரி, வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடக்கு, குடிமங்கலம்.
தர்மபுரி மாவட்டம்: பிடமனேரி, மாந்தோப்பு, வி.ஜெட்டிஹள்ளி, அதகபாடி, பேடரஹள்ளி, நியூ காலனி, இந்தூர், குமாரசாமி பேட்டை, சோம்பட்டி, நேதாஜி பைபாஸ் ரோடு.
கிருஷ்ணகிரி மாவட்டம்: பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உளிவீரனப்பள்ளி, ஒன்னட்டி, உப்பாரப்பள்ளி, ஜாகீர்கோடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி, கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கொத்தூர், நல்லசந்தா.
பெரம்பலூர் மாவட்டம்: பேரளி, கல்பாடி, அசூர், கே.புதூர், மங்கூன், அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலப்புலியூர், சத்திரமனை, கண்ணப்பாடி.
அரியலூர் மாவட்டம்: தூத்தூர், திருமானூர், திருமழபாடி, தொழிற்பேட்டை பகுதி (Industrial), கீழப்பழுவூர்.
தஞ்சாவூர் மாவட்டம்: மணிமண்டபம், அருளானந்தா நகர், தஞ்சாவூர் நகரம்.
திருப்பத்தூர் மாவட்டம்: மிட்டூர், பாலப்பநத்தம், லாலாபேட்டை, ஓம்மக்குப்பம், வாணியம்பாடி, அம்பலூர், கொத்தக்கோட்டை, கேத்தாண்டபட்டி, ஏலகிரி, சர்க்கரை ஆலை பகுதி, கோடையஞ்சி, ரமணநாயக்கன்பேட்டை, மங்கலம், திம்மம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம், தும்பேரி, ஆலங்காயம், ஜவ்வாது மலை, இருணாப்பட்டு, பூங்குளம், நிம்மியம்பட்டு, காவலூர்.
திருச்சி மாவட்டம்: திருப்பூர், ரெட்டிமாங்குடி, எம்.ஆர்.பாளையம், ஊடத்தூர், நெடுந்தூர், நம்பாக்குறிச்சி, நெய்குளம், மணியாக்குறிச்சி, சாத்தமங்கலம்.
கரூர் மாவட்டம்: மண்மங்கலம், வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வாங்கல், என்.புதூர், காடம்பாங்குறிச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிப்பாளையம், நெரூர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிப்பாளையம், பெரியகாளியப்பம்பாளையம், சின்னக்காளியப்பம்பாளையம், குப்புச்சிபாளையம், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுத்தானூர், கோப்பம்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம்.