📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 20, 2026 04:00 PM

டிஜிட்டல் தங்கம் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட் : RBI

டிஜிட்டல் தங்கம் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட் : RBI

முதலீட்டாளர்கள் ஏராளமானோர் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். UPI செயலிகள் மூலம் 100 ரூபாய் முதல் செலுத்தி டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்து வரும் ஏராளமானோருக்கு தற்போது RBI மற்றும் SEBI ஒரு புதிய விதியை கொண்டுவந்துள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் தங்கத்தை தங்களது நேரடி கண்காணிப்பும் கொண்டு வர RBI மற்றும் SEBI முடிவெடுத்து இருக்கின்றதுடிஜிட்டல் தங்கம் தற்போதைய நிலைடிஜிட்டல் தங்கம் தற்போது வரை SEBI மற்றும் RBI பாதுகாப்பின் கீழ் வரவில்லை. எனவே நிறுவனங்கள் கடனால் முடங்கினால் முதலீட்டாளர்களின் பணம் அல்லது தங்கத்தை மீட்டெடுப்பது கடினமாகும்ஆன்லைனில் காட்டப்படும் டிஜிட்டல் தங்கத்திற்கு இணையாக பிஸிக்கல் தங்கம் வைக்கப்பட்டு இருக்கின்றதா ? என்பதை கண்டறிய முடியாதுRBI -SEBI முடிவால் கிடைக்கும் நன்மைகள்1.ஆன்லைனில் விற்கப்படும் ஒவ்வொரு கிராம் டிஜிட்டல் தங்கத்திற்கும் ஈடான 100 % தூய்மையான Physical Gold பாதுகாப்பான லாக்கரில் இருப்பதை உறுதி செய்யும்2.நீங்கள் தங்கம் வாங்கிய செயலி அல்லது நிறுவனம் நஷ்டத்தில் பாதியில் நின்றாலும் கூட பாதுகாப்பில் வைக்கப்பட்ட பிஸிக்கல் தங்கம் உங்களுக்கு பாதுகாப்பு தரும்3.லாக்கரில் வைக்கப்பட்ட பிஸிக்கல் தங்கத்தின் எடையும் செயலியில் வாங்கிய டிஜிட்டல் தங்கத்தின் அளவும் சரியாக இருக்கின்றதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க முடியும்4.மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குசந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் புகார் தீர்க்கும் உரிமைகள் இருப்பதை போல டிஜிட்டல் கோல்ட் முதலீட்டாளர்களுக்கும் அதே பாதுகாப்பு கிடைக்கும்எனவே இனி உங்களுடைய பணத்தை முதலீடு செய்து டிஜிட்டல் தங்கம் வாங்கும்போது உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும். மேலும் நீங்கள் முதலீடு செய்த நிறுவனம் சிக்கலில் மாட்டிக்கொண்டாலும் உங்களுடைய தங்கத்திற்கு அரசு பாதுகாப்பு வழங்கும்இந்நிலையில் இந்த விதிகள் அமலுக்கு வந்தவுடன் ஆன்லைனில் டிஜிட்டல் தங்கம் வாங்குவது என்பது வங்கியில் பணம் போடுவது போல மிகவும் பாதுகாப்பானதாக மாறிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விரைவில் RBI மற்றும் SEBI இதனை அமலுக்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது