தவெக நிர்வாகி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!
தவெக நிர்வாகி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!
நாகை: தவெக நிர்வாகி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சுகன் என்பவர், வேளாங்கன்னியில் விடுதி (லாட்ஜ்) ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வருகிறார். இவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகவும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று காலை சுகனின் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்."
அப்போது அவர் வீட்டில் மெத்தபெட்டமைன் (Methamphetamine) போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. சுகன், அவருடைய சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் ஆகிய 3 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, தவெக நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழு உறுப்பினரான வழக்கறிஞர் பூபாலன் என்பவரே இதற்குத் தலைமை தாங்குவதாகவும், அவர் மூலமாகவே தாங்கள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திருப்பூண்டிக்கு அருகில் உள்ள சிந்தாமணி கிராமத்தில் வசிக்கும் வழக்கறிஞரும், தவெக பிரமுகருமான பூபாலன் வீட்டில் 8 மணி நேரம் தொடர் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில், குறிப்பாக சுகன் என்பவரது வீட்டில் சுமார் 135 கிலோ எடையுள்ள 'மெத்தம்பேட்டமைன்' (Methamphetamine) என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது.
ரூ. 100 கோடி மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, பூபாலன் மற்றும் அவரது கூட்டாளி சுகன் ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்து, விசாரணைக்காகத் திருச்சிக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே தவெக நிர்வாகி போதை பொருள் கடத்திய வெளியான தகவலை அடுத்து தவெகவில் இருந்து அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர்.