📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 08, 2026 11:01 AM

துல்கர் சல்மானுக்கு புத்திகெட்டுபோச்சா? 'I Am Game' படத்தை வச்சு செஞ்ச பயில்வான் ரங்கநாதன்!

துல்கர் சல்மானுக்கு புத்திகெட்டுபோச்சா? 'I Am Game' படத்தை வச்சு செஞ்ச பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: தமிழ்நாட்டில் சமீபகாலமாக மலையாள திரைப்படங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ் படங்களை விட மலையாள படங்களின் மேக்கிங் மற்றும் மேக்கிங் பாணி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதுதான் இதற்கு முக்கியக் காரணம். அந்த வரிசையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள சினிமாவில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், நிகாஸ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் 'I Am Game'. துல்கர் சல்மான், கயாடு லோஹர், ஜோஜு ஜார்ஜ், இயக்குநர் மிஷ்கின், கதிர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்தப் படம் குறித்து விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் விமர்சனத்தை பார்க்கலாம்.

கதைக்களம்: 'I Am Game' படத்தின் கதையை பார்த்தால், ஏற்கனவே தமிழ் மற்றும் பிற மொழிகளில் பலமுறை பார்த்த பழசான கதைக்களத்தின் சாயல் தெரிகிறது. குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியான 'பீச்சாங்கை' படத்தில் பார்த்த அதே அம்சங்களை அப்படியே நினைவூட்டுகிறது.

பொறுப்பில்லாத கதாநாயகன்: படத்தில் துல்கர் சல்மான் ஒரு கோடீஸ்வரராக வருகிறார். ஆனால் வாழ்க்கையில் எந்த பொறுப்பும் இல்லாமல், கடன்களை வாங்கி மது அருந்துவது, சூதாட்டத்தில் ஈடுபடுவது என ஜாலியாக வாழ்கிறார். தாய் கொடுக்கும் 70 லட்சம் ரூபாயை கூட கிரிக்கெட் சூதாட்டத்தில் விட்டுவிட்டு, கடனை அடைக்க துப்பாக்கியோடு ரவுடித்தனம் செய்ய போகும் இடத்தில் மோசமான விபத்தில் சிக்கி தன் கையை இழக்கிறார்.

படத்தின் கதை: விபத்தில் கை சேதமடைந்த பிறகு, மருத்துவமனையில் வேறு ஒருவரின் கை துல்கருக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. அங்கிருந்துதான் படத்தின் மெயின் ட்விஸ்ட் தொடங்குகிறது. அந்த கையில் ஏற்கனவே ஒரு டாட்டூ இருக்கிறது. தூங்கும்போது அந்த கை தானாக துல்கரை அடிக்கிறது, துல்கரின் கட்டுப்பாட்டை மீறித் தன்னிச்சையாக செயல்படுகிறது. திடீரென துப்பாக்கியை எடுத்து சுடுவது என கை பழிவாங்க துடிக்கிறது.

படத்தின் மைனஸ்: இதை பார்க்கும்போது 'இது மருத்துவ அறிவியலை அடிப்படையாக கொண்ட படமா? அல்லது மாயாஜாலக் கதையா? என்ற கேள்விதான் வருது. மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை என்பது அறிவியலில் உண்மைதான். ஆனால், இறந்த ஒருவரின் கையை எப்படி பாதுகாத்து இன்னொருவருக்கு பொருத்துகிறார்கள் என்பதற்கு வலுவான விளக்கமே இல்லை. இறந்தவரின் கைக்கு தனியாக நினைவாற்றல் இருந்து, அது தன்னிச்சையாக செயல்பட்டு பழிவாங்குவது எல்லாம் அறிவியல் ரீதியாக கொஞ்சமும் நம்பும்படியாக இல்லை.

மிஷ்கின் & கதிர் மாஸ்: கிரிக்கெட் சூதாட்ட உலகத்தின் முக்கிய புள்ளியாக இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார். வில்லத்தனத்துடன் நகைச்சுவையையும் கலந்து மிஷ்கின் கொடுத்த பெர்ஃபார்மன்ஸ் படத்திற்குப் பெரிய பிளஸ். அதேபோல தமிழில் கதாநாயகனாக நடித்த கதிர், துல்கர் படம் என்பதற்காக இதில் வில்லன் வேடமேற்றுத் தனது சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். கதாநாயகியாக நடித்துள்ள கயாடு லோக்கரின் கதாபாத்திரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. துல்கர் சல்மானை கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, அவரை உணர்ச்சிவசப்படுத்துவது என வெறும் கவர்ச்சி பொம்மையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

மொத்தத்தில் 'I Am Game' திரைப்படம் ஏற்கனவே பார்த்த பழசான கதையமைப்பு மற்றும் அறிவியல் பூர்வமில்லாத காட்சிகளால் பெரிய சுவாரசியத்தை கொடுக்க தவறிவிட்டுவிட்டார்கள். பெண்களின் கனவுக்கண்ணான துல்கர் பல நல்ல படத்தை கொடுத்த இருக்கிறார் எதற்கான இப்படி ஒரு படத்தை தேர்வு செய்தார் என தெரியவில்லை என பயில்வான் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.