தொடர்ந்து உயரும் தங்கம் விலை
தொடர்ந்து உயரும் தங்கம் விலை - ஒரு கிராம் ரூ.14,360க்கு விற்பனை
சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Published : September 4, 2026 at 1:31 PM IST
சென்னை: 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 4) சவரனுக்கு ரூ.960 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கணிக்க முடியாத வகையில் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் விறுவிறுவென ஏறிய விலையானது, மாத இறுதியில் தடாலடியாக குறைந்து நகை வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், தற்போது மீண்டும் விலை ஏறி வருவதால் தங்கம் வாங்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
செப்டம்பர் ஒன்றாம் தேதி மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் வரை குறைந்த விலை, நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,320 அதிகரித்தது. அதன்படி, கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 3,280 உயர்ந்திருக்கிறது.
நேற்று (செப்டம்பர் 3) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கு விற்பனையானது. இன்று, சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று கிராமுக்கு ரூ. 290 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,240 விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து, ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.500 உயர்ந்து ரூ. 2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 14,360
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,14,880
வெள்ளி ஒரு கிராம் - ரூ. 255
வெள்ளி ஒரு கிலோ - ரூ. 2,55,000
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை