📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 19, 2026 04:33 AM

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்வு

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்வு

சென்னை: தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 1,160 ரூபாய் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,010 ரூபாய்க்கும், சவரன், 1,12,080 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 145 ரூபாய் உயர்ந்து, 14,155 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,160 ரூபாய் அதிகரித்து, 1,13,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 255 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.55 லட்சம் ரூபாய்க்கு விற்கப் பட்டது.