📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 08, 2026 01:00 AM

தமிழ், ஆங்கிலத்தில் புதிய மாத்திரை கவர்

தமிழ், ஆங்கிலத்தில் புதிய மாத்திரை கவர்

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரை கவர்களில் தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தி மொழியும் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஹிந்தி இடம் பெற்ற பழைய கவர்களை பயன்படுத்த வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு மருந்தாளுனர்களுக்கு அறிவுறுத்தியது. அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கில மொழி இடம் பெற்ற புதிய கவரில் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து, அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., சரவணப்பிரியா கூறுகையில், ‘‘இப்பிரச்னை குறித்து கவனத்திற்கு வந்தவுடன் பழைய கவர் நிறுத்தப்பட்டு, தமிழ், ஆங்கிலம் மொழியில் புதிய கவர் வழங்க அறிவுறுத்தப்பட்டது. நேற்று காலை முதல் புதிய கவரில் தான் மருந்து வழங்கப்படுகிறது,’’ என்றார்.