📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 02, 2026 05:03 PM

திருச்சி

திருச்சி

திருச்சி: திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கையின் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணம் செல்வதற்கான நேரடி விமானப் பயணச் சேவையை இண்டிகோ விமான நிறுவனம் வியாழக்கிழமை (அக்டோபர் 1) தொடங்கியது.

ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக ஏற்பட்ட இடையூறுகளால் அந்தப் பயணச் சேவை சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது இந்திய, இலங்கை சுற்றுப் பயண ஏற்பாட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

பாரம்பரியத் தொடர்புகளைக் கொண்ட தமிழ்நாடு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், குறைந்த செலவில் பல இடங்களைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பை இதன்மூலம் பெறமுடியும் என்கின்றனர் அவர்கள்.

நாகப்பட்டினம் துறைமுகத்திற்கும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவையும் இதில் இணைவதால், வரவிருக்கும் சபரிமலை தரிசனப் பயணக் காலத்தில் சுற்றுலாவுக்கு நல்ல ஊக்கம் கிடைக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சுமார் 45 முதல் 50 நிமிடங்களிலேயே யாழ்ப்பாணத்தைச் சென்றடையலாம். வியாழக்கிழமை தொடங்கிய முதல் பயணத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து 45 பயணிகள் திருச்சி வந்தனர். அதேபோல, திருச்சியிலிருந்து 44 பயணிகள் யாழ்ப்பாணம் சென்றனர்.

வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாள்கள் இந்த நேரடி விமானச் சேவை வழங்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுற்றுலா ஏற்பாட்டாளரான ஜெயா தர்மிந்தன், கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் விருந்தோம்பல் துறையில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.