📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 04, 2026 11:03 AM

திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பிரசாரம்; தமிழகத்தில் என்ன மாற்றம் வந்துள்ளது?: தி.க. தலைவர் வீரமணி கேள்வி

திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பிரசாரம்; தமிழகத்தில் என்ன மாற்றம் வந்துள்ளது?: தி.க. தலைவர் வீரமணி கேள்வி

திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பிரசாரம்; தமிழகத்தில் என்ன மாற்றம் வந்துள்ளது?: தி.க. தலைவர் வீரமணி கேள்வி

மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதி இடைதேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பரந்தாமனுக்கு ஆதரவாக வையாவூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாக்கு சேகரித்தார். இதில், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, ராஜேந்திரன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கி.வீரமணி பேசியதாவது: மதுராந்தகம் தேர்தல் எத்தனை நாட்களுக்கு முன் வந்தது. இந்த 5 மாதத்தில் இடைதேர்தல் வர காரணம் என்ன? இது மக்களுக்கு திணிக்கப்பட்ட தேர்தல். மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் கொள்கைக்காக கட்சி மாறினாரா? உங்களுக்கு தெரியும். தாராபுரம், மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர்களுக்கு மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

மரகதம் குமரவேலுக்கு செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மாற்றம் மாற்றம் மாற்றம்... என்ன மாற்றம் வந்துள்ளது? 2500 ரூபாய் மகளிர் உதவி தொகை வழங்கப்படுகின்றதா, பெயர் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. சாதனைகளை சொல்லி தவெக வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கவில்லை. இதுவரை செய்தியாளர்களை முதல்வர் விஜய் சந்தித்துள்ளாரா? சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் 3 நாட்களுக்கு பிறகு பதில் தருகின்றார். மஞ்சள் பையை துணிபை என்று முதல்வர் விஜய் மாற்றம் செய்துள்ளார். விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யவில்லை. அவர்களை அழைத்து பேசவில்லை.

தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்றும் திட்டத்தில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதை முதல்வர் விஜய், கண்டுகொள்ளவில்லை. நிர்மல் குமார், மின்சார அமைச்சர் அல்ல... அவர் மின்வெட்டு அமைச்சர். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போல் பேசுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாகத்திற்க்கு யாரும் சான்றிதழ் கொடுக்க வேண்டாம். உண்மை ஒருநாள் வெளியாகும். தற்போது மின்வெட்டை ஒப்புகொள்கின்றனர். ஒரு நாளைக்கு 8 கொலை நடக்கிறது. சட்டம்- ஒழுங்கு சரில்லை. இதை பற்றி கவலைபடுவதில்லை. கட்சிக்கு பெயர், ‘வெற்றி’ என வைத்துள்ளார். ஆனால் போட்ட உத்தரவை வாபஸ் பெறுவதில் மட்டுமே வெற்றி.யாக உள்ளது. இந்த தேர்தலை திணித்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். புதிய தலைமை செயலகம் கட்ட இப்போது என்ன அவசியம்.