📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 01, 2026 05:03 AM

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ரூ.136 கோடி ஊழல்: அதிமுக குற்றச்சாட்டு

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ரூ.136 கோடி ஊழல்: அதிமுக குற்றச்சாட்டு

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ரூ.136 கோடி ஊழல்: அதிமுக குற்றச்சாட்டு

சென்னை: தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.இதுகுறித்து அதிமுக தேசிய செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் கூறியதாவது: எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதற்கான பயனாளிகள் இருப்பார்கள். தவெக சார்பில் தங்க மோதிரமாக இருக்கட்டும், இல்ல தங்க செயினா கொடுக்கட்டும், தங்க கொலுசாக கூட கொடுக்கட்டும் அது தவறு இல்லை. அது, அந்த ஆட்சியாளர்களுடைய விருப்பம், அதில் தவறு இல்லை. ஆனால் அதை முறையாக பண்ணுகிறார்களா என்பதுதான் கேள்வி.

இதில் இரண்டு கேள்வி வரும். இந்த தொகையை வேறு எதற்காகவாவது செலவு செய்யலாமா என்ற கேள்வி வரும். இல்லை, தேவையில்லை இதுதான் பிடித்திருக்கிறது என்று வரும். அவர்கள் எதை பிடித்திருக்கிறது என்று சொல்வதை முறையாக செய்கிறார்களா என்று பார்த்தால், இப்ப வந்திருக்கிற தவெக எம்எல்ஏ திருட்டு சக்தியாக மாறி இருக்கிறது. எம்எல்ஏ திருட்டு சக்தியில் இருந்து மக்கள் திருட்டு சக்தியாக மாறிக்கொண்டு இருக்கும் திட்டம்தான் இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.

இந்த திட்டத்தோட முதல் கொள்ளையடிக்கும் பணத்தோட மதிப்பு ரூ.136 கோடியே 65 லட்சத்து 22 ஆயிரம். திட்டத்தின் பயனாளிகள் பட்ஜெட்டில் சொன்னது 4,41,667 பேர். ஒவ்வொருவருக்கும் ஒரு கிராம் மோதிரம். இன்றைய விலை ரூ.618 கோடியே 34 லட்சம். ஆனால் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மதிப்பு ரூ.755 கோடி. வித்தியாசம் ரூ.136 கோடி. குறைந்தபட்சம் கொள்ளையடிக்கும் பணம் இது.

இந்த திட்டம் எப்படி நடைமுறைக்கு வந்தது என்றால், அரசு சார்பில் டெண்டர் விடும்போது எல்1, எல்2 என்று பிரித்து கொடுப்பார்கள். இதை பிரித்து கொடுப்பதற்கான காரணம், யார் எல்2 கேட்கிறார்களோ அவர்கள் எல்1 கட்டணத்தை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இந்த திட்டத்தில் எடுத்தது எல்1 அடுத்து எல்9 ஆகும். எல்1 ஒரு பைசாவுக்கு டெண்டர் கேட்கிறார். எல்9 ரூ.978.50 பைசாவுக்கு கேட்டிருக்கிறார். யாரு ஒத்துக்கொண்டது? எல்9 டெண்டர் ஒரு பைசாவுக்கு கொடுக்க ஒத்துக் கொண்டாரா? அரசு சார்பில் இந்த விலை ஒப்புக்கொள்ளப்பட்டது பற்றி வெளிப்படையான அறிவிப்பு எதுவும் இல்லை.

வருடத்திற்கு ரூ.2 கோடி, ரூ.2.5 கோடி அதிகபட்சமாக ரூ.15 கோடி வரை மக்களுக்காக (சிஎஸ்ஆர்) செலவு செய்ததுதான் தங்க மோதிரம் வழங்கும் நிறுவனம். அப்படிப்பட்ட நிறுவனம், எங்களுக்கு லாபநோக்கம்தான் முக்கியம் என்று கூறி டெண்டர் எடுப்பதற்கான உருட்டுற ஒரு கட்டுக்கதை தான் ஊழலுக்காக முதல் விதை. 1 பைசாவில் தங்கம் விற்பனையில் 100 ஆண்டு காலம் இருப்பவர்களால்கூட கொடுக்க முடியவில்லை. கேட்டால், லாபநோக்கம் இல்லை என்கிறது. திட்டத்தின் மதிப்பீட்டிற்கும், இந்த பயனாளிகளுக்கும் இடையே ரூ.136 கோடி வித்தியாசம் வருகிறது. இதுதான் ஊழலின் முதல் அடிப்படை.

நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, ஒரு பைசாவுக்கு தங்கம் எப்படி கொடுக்க முடியும் என்று கேள்வி கேட்டவுடன், அந்த நிறுவனம் அன்றைய தங்கத்தின் விலையைவிட கூடுதலாக ஒரு பைசா என்று ஒரு கதை சொன்னார்கள். இப்போது எல்-1 விலைக்கு எல்-9 கொடுக்கிறார்களா? எல்-9 ரேட்டுக்கு எல்-1 கொடுக்கிறார்களா? என்பது பற்றியும் அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

* சிஏஜி அறிக்கையில் மாட்டுவது உறுதி

விஜய் முதல்வராக வந்த பிறகு அவரது உதவியாளர்கள், நண்பர்கள், சொந்தக்காரர்களுக்கு தான் அரசு பதவி வழங்கி வருகிறார். அதேபோன்று தற்போது தாய் மாமன் திட்டத்தில் உள்ள நிறுவனம் ஒரு தங்க விலையுடன், மதிப்புக்கூட்டு விலையாக (செய்கூலி, சேதாரம்) ஒரு பைசா என்று கோரியுள்ளது. இந்த நிறுவனத்துக்கு விஜய் விளம்பர நடிகராக இருந்தார். அந்த நிறுவனத்துக்குத்தான் தற்போது டெண்டர் வழங்கியுள்ளார்.

எல்9 டெண்டர் கோரியுள்ள நிறுவனத்தையும் தாய் மாமன் மோதிரம் திட்டத்தில் மோதிரம் வழங்க அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் இந்த நிறுவனத்துக்கு ஒரு கிராம் எவ்வளவு தொகைக்கு மோதிரம் வழங்க வேண்டும் என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதுபோன்ற வெளிப்படைத்தன்மை இல்லாமல் இந்த திட்டத்திற்காக 2 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறைந்தபட்சம் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளது. இவர்கள் கண்டிப்பாக மத்திய தணிக்கை குழு அறிக்கையில் மாட்டிக்கொள்வார்கள் என்று கோவை சத்யன் கூறினார்.