📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 04, 2026 09:04 AM

பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்

பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்

பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் நேற்று (அக்டோபர் 3) சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 94. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், கதாசிரியர் என பன்முக வித்தகராக திகழ்ந்த சிங்கீதம் சீனிவாசராவ் தமிழில் 'ராஜபார்வை', 'அபூர்வ சகோதரர்கள்'. 'மைக்கேல் மதன காமராஜன்', 'மகளிர் மட்டும்'. 'சின்ன வாத்தியார்', 'காதலா காதலா', 'லிட்டில் ஜான்', 'மும்பை எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் படங்கள் இயக்கியுள்ளார்.

90 வயதைக் கடந்த நிலையிலும் சினிமா மீதான காதலைக் கைவிடாத சிங்கீதம் சீனிவாச ராவ் சமீபத்தில் 'சிங் கீதம்' என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பான் இந்தியா படைப்பாக வெளியானது. சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.