📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 29, 2026 05:00 PM

பக்கத்தான் ஹரப்பான், பெர்சத்து இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை: ஃபாஹ்மி, உல‌க‌ம் செய்திகள்

பக்கத்தான் ஹரப்பான், பெர்சத்து இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை: ஃபாஹ்மி, உல‌க‌ம் செய்திகள்

புத்ராஜெயா: மலாக்கா சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகப் பக்கத்தான் ஹரப்பான், பெர்சத்து ஆகிய கட்சிகளுக்கு இடையே கூட்டணிக்கான அதிகாரபூர்வப் பேச்சுவார்த்தை இதுவரை நடைபெறவில்லை என்று மலேசியத் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

கூட்டணி தொடர்பான எந்த ஓர் இறுதி முடிவையும் பக்கத்தான் ஹரப்பான் கட்சியின் தலைமைத்துவம் எடுக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

“இதுவரை இக்கூட்டணி குறித்து எவ்விதப் புதிய முன்னேற்றமும் இல்லை. இது தொடர்பான எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை,” என்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) அஞ்சல் சேவை வழியிலான மருத்துவ நிதியுதவித் திட்டத் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அமைச்சர் ஃபாஹ்மி கூறினார்.

திங்கட்கிழமை (செப்டம்பர் 28) இரவு மலாக்காவில் பக்கத்தான் ஹரப்பான் மற்றும் பெர்சத்து தலைவர்கள் மட்டுமே கலந்துகொண்ட இரவு விருந்து ஒன்று நடைபெற்றது. இதன் காரணமாக இரு கட்சிகளுக்கும் இடையே தேர்தல் கூட்டணி அமைவது குறித்த ஊகங்கள் வலுத்தன.

இருப்பினும், இந்த நிகழ்வு மலாக்கா சட்டமன்றத் தேர்தல் குறித்த கருத்துப் பரிமாற்றத்துக்கே என்றும் அதிகாரபூர்வக் கூட்டம் அல்ல என்றும் மலாக்கா பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் ஹிஷாமுதீன் அப்துல் கரீம் விளக்கம் அளித்துள்ளார்.