📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 29, 2026 06:03 PM

நவம்பர் 1 முதல் மாற்றுத் திறனாளிகளும் வழிகாட்டி நாய்களை உணவகங்களுக்கு அழைத்துச் செல்லலாம், சிங்க‌ப்பூர் செய்திகள்

நவம்பர் 1 முதல் மாற்றுத் திறனாளிகளும் வழிகாட்டி நாய்களை உணவகங்களுக்கு அழைத்துச் செல்லலாம், சிங்க‌ப்பூர் செய்திகள்

நவம்பர் 1ஆம் தேதி முதல் மாற்றுத் திறனாளிகளும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும்கூட உணவகங்களில் வழிகாட்டி உதவ தங்களது நாய்களை அழைத்துச் செல்லமுடியும்.

அதற்கேற்ற வகையில், பார்வைத்திறன் குறைபாடு உள்ளோர் மட்டுமே தற்போது தங்களுக்கு உதவியாக நாய்களை உணவகங்களுக்கு அழைத்துச் செல்லலாம் என்ற விதிமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்ய பயிற்சி அளிக்கப்பட்ட இந்த நாய்கள், உரிமம்பெற்ற சில்லறை உணவு நிலையங்களுக்குள் தங்களது உரிமையாளர்களுடன் செல்ல அனுமதிக்கப்படும்.

இதனை சிங்கப்பூர் உணவு அமைப்பு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, மாற்றுத்திறனாளிகளுக்கான ‘எஸ்ஜி எனேபிள்’ அமைப்பு ஆகியன கூட்டாகத் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அந்த அமைப்புகள் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டன.

உணவு நிலையங்களில் உணவு உண்ணும் பகுதி, சிற்றுண்டிப் பகுதி, கழிவறை ஆகியவற்றுக்கும் நாய்களை அழைத்துச் செல்ல அனுமதி உண்டு என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய விதிகளின்படி, பார்வைத் திறன் குறைபாடுள்ளவர்களுக்கு உதவும் வழிகாட்டி நாய்களுக்கு மட்டுமே உணவகங்களுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த உதவி நாய்கள் ‘செல்லப்பிராணிகள்’ அல்ல மாறாக ‘பணிபுரியும் விலங்குகள்’ என அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், உணவக உரிமையாளர்கள் இவற்றைத் தங்கள் வளாகத்திற்குள் அனுமதிக்க தனியாக எந்த உரிமமும் பெறத் தேவையில்லை.