பிரதமர் மோடியின் ஆட்சியில் தான் தமிழுக்கு சர்வதேச அங்கீகாரம்; ராகுலுக்கு பாஜ பதிலடி
புதுடில்லி: சென்னையில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றார். அப்போது, தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல் நடத்துவதாக அவர் குற்றம்சாட்டினார். இதற்கு பாஜ எம்பி சுதன்ஷூ திரிவேதி பதிலடி கொடுத்துள்ளார்.
டில்லியில் அவர் கூறியதாவது; நீட் தேர்வு அறிமுகத்தால் தமிழ் மொழி நசுக்கப்படுவதாக ராகுல் கூறுவது முற்றியது தவறானது. பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் தான் தமிழ் மொழிக்கு சர்வதேச அளவில் மரியாதையும், அங்கீகாரமும் அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று ரூ.13 ஆயிரம் கோடி திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்துள்ளார். ரூ.4,300 கோடியில் சென்னை மெட்ரோ திட்டம் , ரூ.3,700 கோடியில் தேசிய நெடுஞ்சாலைகள் திட்டம்,, ரூ.7,750 கோடியில் காரைக்கால்-பெரம்பூர் ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.
சென்னை வஉசி, காமராஜர் துறைமுகங்களில் சரக்கு மற்றும் சொகுசுக் கப்பல் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்திற்காக 41 இடங்களை அடையாளம் காணப்பட்டுள்ளன. சென்னை-காமராஜர்- கடலூர் பெருந்துறைமுகக் கூட்டமைப்பிற்கு 2047க்குள், ஆண்டிற்கு 300 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.