📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 07, 2026 07:04 PM

பெரும்பாலான பிரிவுகளில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் சரிவு

பெரும்பாலான பிரிவுகளில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் சரிவு

புதன்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற ஏலத்தில் பெரும்பாலான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் சரிவைச் சந்தித்தன.

குறிப்பாக, பிரிவு ‘ஏ’ வாகனங்களின் சிஓஇ கட்டணம் சிறிய அளவில் குறைந்து $130,001 ஆனது. செப்டம்பர் மாதத் தொடக்கப் பகுதியில் $133,009 என்னும் உச்சத்தைத் தொட்டது அந்த வாகனப் பிரிவு.

சிறிய, குறைவான ஆற்றல் கொண்ட வாகனங்களும் மின்சார வாகனங்களும் இந்தப் பிரிவில்தான் உள்ளன. இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஏலத்தில் $131,890 என்று பதிவான கட்டணம் 1.4 விழுக்காடு குறைந்தது.

பொதுவான வாகனங்களைக் குறிக்கும் ‘சி’ பிரிவு, சரிவிலிருந்து தப்பியது. அதன் சிஓஇ கட்டணம் $137,000 என்னும் பழைய மதிப்பையே இந்த ஏலத்திலும் தொடர்ந்தது.

பெரிய, ஆற்றல் மிகுந்த கார்களும் பெரிய மின்சார வாகனங்களும் இடம்பெற்றுள்ள ‘பி’ பிரிவு 2.2 விழுக்காடு இறக்கத்தைச் சந்தித்தது. அதன் சிஓஇ கட்டணம் $133,000 என்பதிலிருந்து $130,100க்குக் குறைந்தது.

வர்த்தக வாகனங்கள் இடம்பெற்றுள்ள ‘சி’ பிரிவின் கட்டணம் $92,144 என்பதிலிருந்து 0.3 விழுக்காடு குறைந்து $91,889 என முடிந்தது.

‘டி’ பிரிவில் உள்ள மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம் 9.7 விழுக்காடு என்னும் பெரிய சரிவைச் சந்தித்தது. $12,201 என்னும் பழைய கட்டணத்திலிருந்து சரிந்து $$11,012 என ஏலத்தில் முடிவானது.