📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news October 08, 2026 02:01 PM

பெண்ணை ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்?.. தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. கிளாரிட்டி கேட்கிறாராம்

பெண்ணை ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்?.. தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. கிளாரிட்டி கேட்கிறாராம்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை வென்றவர் முத்துக்குமரன். அதற்கு பிறகு சில படங்களில் கமிட்டானதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக வஹிதா என்ற பெண் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதனையடுத்து பலரும் முத்துக்குமரனை விளாசிவருகிறார்கள்.

தனியார் சேனலில் நடந்த பேச்சு போட்டி ஒன்றில் பேசி பிரபலமானவர் முத்துக்குமரன். அதற்கு பிறகு சில மீடியா நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றினார். அப்படியே சோஷியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவ்வாக இருந்த அவர்; தன்னுடைய சுத்தமான தமிழ் பேச்சினாலும் பலரையும் கவர்ந்தார். அப்படிப்பட்ட சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கதவுகள் அவருக்கு திறந்தன. வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளிலிருந்தே ஏதோ ஒரு வகையில் அனைவரையும் இம்ப்ரெஸ் செய்தார்.

பிஸியான முத்துக்குமரன்: தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி இறுதியாக டைட்டில் வின்னராகவும் மாறினார். பிக்பாஸ் கேடயத்தை வாங்கியபோது அவரது பேச்சும் அனைவரையும் ஈர்த்தது. அதனையடுத்து சில படங்களில் அவர் கமிட்டானதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி சில நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டிருக்கிறார். மேலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அவர்; சமீபத்தில்கூட இயக்குநர் ராமுடன் உரையாடல் நிகழ்த்தியிருந்தார்.

சர்ச்சையில் முத்துக்குமரன்: அவரது வண்டி நல்லபடியாக போய்க்கொண்டிருப்பதாக எல்லோரும் நினைத்த சூழலில் இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது, அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக சொல்லி வஹிதா என்ற பெண் வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "இன்னும் எனக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என தெரியவில்லை. மனதில் இருப்பதை சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறேன். கடந்த முறை சந்திக்கும்போது அவர் என்னை வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார். அது கொஞ்சம் கடத்தல்தான்.

A post shared by wahidha begum (@wahidha_akdhar)

ஆயிரம் முத்தங்கள்: வீட்டில் வைத்து எனக்கு ஆயிரமாயிரம் முத்தம் கொடுத்தார். நிறைய காதல் கொடுத்தார். அதற்காகத்தான் நான் காத்திருந்தேன். என்னை கிண்டல் செய்தாலும் பரவாயில்லை. நானும், அவரும் உடல் ரீதியான தொடர்பும் வைத்துக்கொண்டோம். ஏற்கனவே ஒரு காதல் தோல்வியில் நான் இருக்கிறேன் என அவருக்கு தெரியும். என்னை பேசியே மயக்கிவிட்டார். நான் தாலி கட்டுவிடுவேன் என சொல்லி எக்கச்சக்க முத்தங்கள் கொடுத்தார். ஆண்களை நம்பக்கூடாது என எல்லோரிடமும் சொல்வேன். நானே இப்படி ஆகிவிட்டேன்.

திருப்பி திருப்பி சொன்னார்: உன் விருப்பம் இல்லாமல் உன்னை தொடமாட்டேன் என திருப்பி திருப்பி சொன்னார். தாலி கட்டுவேன் என்று அவர் சொன்னபோது நான் நம்பிவிட்டேன். எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன். போதும் சாமி முடியவில்லை. எல்லாமே முடியப்போகிறது. இனிமேல் எனக்கு தெம்பு இல்லை" என கூறியிருந்தார். வீடியோவை வெளியிட்ட கையோடு மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கும் முயன்றார். நல்வாய்ப்பாக மருத்துவமனையில் சிகிச்சை பலனளித்து மீண்டுவிட்டார். இதற்கிடையே தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கும் இன்னொரு வீடியோவில் வஹிதாவை முத்துக்குமரன் கொஞ்சம் காட்சிகளும் இருக்கின்றன.

முத்துக்குமரன் விளக்கம்: இந்தச் சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் முத்துக்குமரன் விளக்கம் அளித்திருக்கிறார். அதில், "நானும், வஹிதாவும் நல்ல நண்பர்கள். அவர் ஏன் இப்படி செய்தார் என தெரியவில்லை. அதுகுறித்துதான் கிளாரிட்டி கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர் ஏற்கனவே கொஞ்சம் டிஸ்டர்பாக இருந்தார்" என குறிப்பிட்டிருக்கிறார். இந்த விவகாரம் இணையத்தில் வைரலாகியிருக்கிறது. மேடையில் முற்போக்கு பேசிக்கொண்டு, ஒரு பெண்ணை ஏமாற்றியிருக்கிறார்; இவர்கள் மாதிரியான ஆட்களின் போலி முகத்திரை கிழிகிறது என சகட்டுமேனிக்கு கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.