📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news October 08, 2026 04:04 PM

சாலையில் திடீர் ராட்சத பள்ளம்; குப்புற விழுந்த கார்; அதிர்ச்சி வீடியோ

சாலையில் திடீர் ராட்சத பள்ளம்; குப்புற விழுந்த கார்; அதிர்ச்சி வீடியோ

சென்னை: சென்னை திருவான்மியூர் ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வரக்கூடிய சாலையில் திடீர் பள்ளம் பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விழுந்த காரின் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.

சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், திடீரென 10 அடி ஆழத்திற்கு ராட்சத பள்ளம் உருவானது. அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த சொகுசு கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த பள்ளத்திற்குள் தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்தது.

விபத்து நடந்த உடனே காரில் இருந்த டிரைவர் வெளியே குதிவிட்டதால், லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பின்னர் கிரேன் மூலமாக கார் பள்ளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. இந்த திடீர் விபத்து காரணமாக சென்னை ஓ.எம்.ஆர் சாலை மற்றும் திருவான்மியூர் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

களத்தில் தினமலர்!

சென்னை சாலையில் திடீர் பள்ளம்; குப்புற விழுந்த கார் அதிர்ச்சி வீடியோ; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்