📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 09, 2026 02:04 AM

இந்தியன் 3 மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. சிக்மாவுக்கு அப்புறம் செம ஸ்பீடு தான் போல!

இந்தியன் 3 மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. சிக்மாவுக்கு அப்புறம் செம ஸ்பீடு தான் போல!

சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்த நிலையில், படத்தின் வசூல் சுமார் 8 கோடி அளவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சிக்மா படத்தைத் தொடர்ந்து லைகா அடுத்து இந்தியன் 3 படத்தை தூசு தட்டுமா என பலரும் எதிர்பார்த்த நிலையில், சற்றுமுன் இந்தியன் 3 படத்தின் மெகா அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் அனைவரும் வியக்கும் படமாகவும் இருந்தது. இருவரும் மீண்டும் இணைவதாக சொல்லி இந்தியன் 2 அப்டேட் வந்த நாளில் இருந்தே ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால், 2024ம் ஆண்டு வெளியான இந்தியன் 2 படம் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை.

இந்தியன் 3 அப்டேட்: இந்தியன் 2 படத்தை இயக்குநர் ஷங்கர் ரொம்பவே பெரிதாக எடுத்த நிலையில், அதனை 2 பாகங்களாக வெளியிட திட்டமிட்டார். இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்துக்கான லீடையும் அதன் காட்சிகளை ஒரு டீசர் போலவே வெளியிட்டார். ஆனால், இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களை பெரிதாக கவராத நிலையில், இந்தியன் 3 படத்துக்கு மேலும், செலவு செய்ய வேண்டுமா என்கிற நிலையில், லைகா நிறுவனம் அந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டது. இந்நிலையில், மீண்டும் இந்தியன் 3 படத்தை முழுமையாக நிறைவு செய்து ரிலீஸ் செய்யப் போவதாக லைகா நிறுவனம் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மிரட்ட வருகிறார் சேனாபதி: பிக் பாஸ் நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதியிடம் கொடுத்த கமல்ஹாசன் தக் லைஃப் படத்துக்குப் பிறகு என்ன செய்யப் போகிறார் என ரசிகர்கள் ரொம்பவே ஆசையாக காத்திருக்கின்றனர். அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என அறிவிப்புகள் வெளியாகின. ரஜினிகாந்தின் தர்மன் படத்தையும் சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தையும் தயாரித்துள்ள கமல் ரஜினியுடன் நெல்சன் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால், இந்தியன் 3 வரவேண்டுமே கமல்ஹாசனின் பெரும் உழைப்பு வீணாகக் கூடாதே என ரசிகர்கள் நினைத்த நிலையில், சேனாபதி மீண்டும் வரப்போகிறார் என லைகா அறிவித்துள்ளது. இந்தியன் 3 வார்மோட் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.