📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 17, 2026 12:03 PM

ஒரு வாரத்திற்கு பின் தங்கம் விலை உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன.?

ஒரு வாரத்திற்கு பின் தங்கம் விலை உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன.?

தங்கம் விலை இந்த வார தொடக்கத்தில் இருந்து குறைந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன் தினமும் சவரனுக்கு ரூ.600-ம், கிராமுக்கு ரூ.75-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,120-க்கும், ஒரு கிராம் ரூ.13,515-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,535-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலையிலுல் மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 40ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.