ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.20 உயர்வு : இன்றைய தங்கம்
பண்டிகை காலம் துவங்கியிருக்கும் நிலையில் மக்களின் பார்வை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிகமாக உள்ளது. பெரும்பாலான மக்கள் பண்டிகை காலங்களில் நகைகள் வாங்க விருப்பப்படுவார்கள் என்பதால் இந்த காலகட்டங்களில் பெரும்பாலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இன்னும் சொல்லப்போனால் கடந்த ஐந்து நாட்களில் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்து வந்தது. ஆனால் இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்து இருப்பதை காண முடிகின்றது. இன்றைய தினம் அக்டோபர் 17 ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை தற்போது விரிவாக பார்க்கலாம் ஆபரண தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 13,515 ரூபாயாக இருந்தது. இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 20 உயர்ந்து 13,535 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 108,280 ரூபாயாக இருக்கின்றது.தூய தங்கம் விலைநேற்றும் முன்தினமும் ஆபரண தங்கம் மட்டுமல்லாமல் தூய தங்கத்தின் விலையும் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று ஒரு கிராம் தூய தங்கம் விலை 21 ரூபாய் உயர்ந்து 14,765 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு சவரன் தூய தங்கத்தின் விலை 118,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றதுவெள்ளி விலை நிலவரம்கடந்த பல நாட்களாக வெள்ளியின் விலை நிலையாக கிராமிற்கு 245 ரூபாயாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 5 ரூபாய் குறைந்து 240 ரூபாயாக மாறியது. இதனைத்தொடர்ந்து இன்றும் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 240 ரூபாய்க்கு தான் விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 240,000 ரூபாயாக உள்ளது