📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 17, 2026 01:04 PM

ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு

ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு

ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு- மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு!

காஞ்சிபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதை அடுத்து மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பூசிவாக்கம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட சுரங்கப்பாதைப் பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கிச் சென்ற மின்சார ரயில்கள் பூசிவாக்கம் அருகே 2 மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருமால்பூர் – சென்னை, சென்னை – அரக்கோணம் வழித்தடங்களிலும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்.