📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 21, 2026 06:03 PM

ஒரு ரூபாய் கூட முதலீடு தான்; முதல்வரை கேலி, கிண்டல் செய்வது நல்லதல்ல; சொல்கிறார் அமைச்சர் மரியவில்சன்

ஒரு ரூபாய் கூட முதலீடு தான்; முதல்வரை கேலி, கிண்டல் செய்வது நல்லதல்ல; சொல்கிறார் அமைச்சர் மரியவில்சன்

சென்னை: ஒரு ரூபாய் கூட முதலீடு தான்; முதல்வர் விஜய்யை கேலி, கிண்டல் பண்ணுவது நல்லதல்ல என வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலைக்கு தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் மரியவில்சன் கூறியதாவது: அண்ணாமலை முதிர்ந்த அரசியல்வாதி என்று நினைத்தேன்; கடந்த 7,8 வருடமாக பாஜவில் இருந்து இருக்கிறார். மாநில தலைவராக கூட இருந்திருக்கிறார். அவரிடம் இந்த கருத்து வருவது நல்லது அல்ல என்று நினைக்கிறேன். இன்றைக்கு நிறைய முதலீடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு ரூபாய் கூட முதலீடு தான். நீங்கள் எப்படி இதை உதாசீனம் படுத்த முடியும்.

ஏஐ தொழில்நுட்பத்தால் நிறைய சாப்ட்வேர் கம்பெனிகள் பிரச்னைகளை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள். நிறைய மேன் பவர் லாஸ்; சிறிய சிறிய பிராஜெக்ட் கூட எடுத்து கொண்டு இருக்கிறார்கள். எங்கள் முதலீடு வந்தாலும் அதனை முதல்வர் விஜய் எடுத்து கொண்டு வருவதை கேலி, கிண்டல் பண்ணுவது நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன். தவெக ஆட்சிக்கு வநத பிறகு வரி வசூல் முறைப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது ஊழல் இல்லாத வரி வசூல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் வெளிப்படையான, தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது; ஊழல் இல்லாத காரணத்தினால் பத்திரப்பதிவுத்துறை வருவாய் அதிகரித்துள்ளது. ஊழல் இல்லை என்பதால் பத்திரப்பதிவுக்கு அதிகம் பேர் வருகின்றனர். தமிழக அரசு பெறும் கடன் அளவு குறைந்து வருகிறது. கடந்த ஆட்சியை ஒப்பிடுகையில் கடன் அளவை குறைத்து வருகிறோம். தமிழக அரசின் வருவாயை பெருக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு மரிய வில்சன் கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்