📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 09:31 AM

நடிகர் மன்சூர் அலிகான், கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்

நடிகர் மன்சூர் அலிகான், கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்

நடிகர் மன்சூர் அலிகான், கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர், முதலமைச்சரின் பிறந்தநாளை ஒட்டி நாளை அல்லது நாளைமறுநாள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published : June 20, 2026 at 4:11 PM IST

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான், கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில், சனிக்கிழமை தோறும் மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தவெகவில் இணைவதற்காக, மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

குறிப்பாக நடிகர் மன்சூர் அலிகான் தவெவில் இணைய வந்திருந்தார். அதேபோன்று கம்பம் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகநாத் மிஸ்ரா, தனது நமது மக்க முன்னேற்ற கழகம் கட்சியை தவெகவில் இணைப்பதற்காக வந்திருந்தனர். காலையில் பூங்கொத்துடன் வந்த இவர்கள், பனையூர் தலைமை அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர். அலுவலகத்திற்குள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பலரும் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

பகல் 12 மணி அளவில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில், மாற்றுக் கட்சியினர் இணையும் விழா தொடங்கியது. அதன் பின்பு ஒவ்வொருவராக தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த இணைப்பு விழாவில் அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, வெங்கட்ரமணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் என்.ஆனந்த் பேசுகையில், "இன்னும் 20 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சி ஊழல் இல்லாமல் நடைபெறும். எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சிலர், அவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதுபோன்று யாரேனும் இடமாற்றம் செய்ய பணம் கேட்டால் போலீசில் பிடித்துக் கொடுங்கள்.

கட்சியில் திறமை இருப்பவர்களுக்கு கட்சியின் பொறுப்புகள் வழங்கப்படும். 234 தொகுதியிலும் தவெக தலைவர் விஜய்தான் வேட்பாளர். நான் 4 நாட்கள்தான் பிரச்சாரதிற்கு சென்றேன். எங்கள் தலைவரை நம்பித்தான் மக்கள் வாக்காளித்தனர்.

தவெகவில் இணைந்துள்ளவர்களுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பொறுப்புகள் வழங்கப்படும். எங்களை நம்பி வந்தவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும். நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம். மக்களுக்கு எது தேவையோ அதை செய்து கொடுப்போம்.

அமைச்சர்களை தெரியும் என்று கூறி தலைமைச் செயலகத்தில் சுற்றித் திரிந்த 7, 8 பேரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம். ஏரி தூர் வாரும் பணிகளை கண்காணிக்க அந்தந்த பகுதிகளை சேர்ந்த 5, 6 பேரை ஈடுபடுத்த உள்ளோம்" என்றார்.