Latest News
June 21, 2026 10:32 AM
பணி நிரந்தரம் செய்யக்கோரி துாய்மை பணியாளர்கள் பேரணி
சென்னை: பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட, 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்களின் உழைப்போர் உரிமைகள் இயக்கத்தினர், சென்னையில் நேற்று பேரணி நடத்தினர்.
உழைப்போர் உரிமைகள் இயக்கம் சார்பில், துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வார விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று எழும்பூர் சித்ரா திரையரங்கம் முதல் ராஜரத்தினம் மைதானம் வரை பேரணி நடந்தது.
இதில், மாநில தலைவர் பாரதி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.