‘நமத்து’ போன பொரி தயாரிப்பு
ஆயுத பூஜை, விஜயதசமி காலத்தில் அதிக விற்பனை நடைபெறும் பொரி தயாரிப்பு சிறுதொழில், மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் தேவை சரிவு காரணமாக நெருக்கடியை சந்தித்து வருகிறது.
பொரி தயாரிப்புக்கு ‘லாலத்’ என்ற சிறப்பு அரிசி பயன்படுத்தப்படுகிறது. பண்டிகை காலங்களில் இதற்கான தேவை அதிகரிப்பது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக விற்பனை குறைந்து வருவதால், பொரி தயாரிப்பை நம்பியுள்ள சிறுதொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் பண்டிகை சீசனில் 5,000 மூட்டைகளுக்கும் அதிகமான பொரி வியாபாரிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தேவை குறைந்ததால் விற்பனை 2,000 மூட்டைகள் அளவுக்கு சரிந்தது. அப்பகுதியில் முன்பு கிட்டத்தட்ட 50 பொரி தயாரிப்பாளர்கள் இருந்த நிலையில், அவர்களின் எண்ணிக்கையும் மூன்றாக குறைந்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசு சில்லரை விலை குறியீட்டின்படி, 2025 ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆகஸ்டில் பொரி விலை 4.47 சதவீதமும், அரிசி விலை 7.24 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதனால், அரிசியை முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தும் பொரி உள்ளிட்ட சிறு உணவு தயாரிப்பு தொழில்களின் உற்பத்தி செலவு மேலும் அதிகரித்துள்ளது