📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 11, 2026 09:38 AM

நேற்று குறைந்து இன்று ஏறிய தங்கம் விலை

நேற்று குறைந்து இன்று ஏறிய தங்கம் விலை

நேற்று குறைந்து இன்று ஏறிய தங்கம் விலை - சவரனுக்கு ரூ. 880 உயர்வு

வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 55 ஆயிரத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Published : September 10, 2026 at 1:38 PM IST

சென்னை: 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 1,000 குறைந்த நிலையில் இன்று ரூ. 880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,14,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை தினந்தோறும் மாறி மாறி வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நகை முதலீட்டாளர்கள் எப்போது தங்கம் வாங்கலாம் என்ற கேள்வியில் உள்ளனர். இதனிடையே, சர்வதேச சந்தையில் மற்றொரு உலோகம் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதுதான் செம்பு.

சுத்திகரிக்கப்பட்ட மதிப்புமிக்க உலோகங்களாக பார்க்கப்படுகிற தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றின் விலையானது அமெரிக்க பொருளாதார நிலை மற்றும் டாலர் மதிப்பை பொறுத்து மாற்றம் கண்டு வருவதால், முதலீட்டாளர்கள் 'தொழில்துறை உலோகங்களின் அரசன்' என்று அழைக்கப்படுகிற செம்புவை அதிகளவில் வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால் செம்பின் விலையும் உயர்ந்து வருகிறது.

இருப்பினும், இந்தியாவை பொறுத்தவரை திருமணம், சடங்கு உள்ளிட்ட சுப நிகழ்வுகளில் மதிப்பு மற்றும் மரியாதையை பிரதிபலிப்பதாக தங்கம் பார்க்கப்படுவதால் இதன் விலையேற்றம் மிக குறைந்த அளவில் தங்கம் வாங்குகிற வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று (செப்டம்பர் 9) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 125 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,145க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,255க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,000 குறைந்து ரூ. 1,13,260க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 880 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி, இன்று ஒரு கிராம் ரூ. 255க்கும், ஒரு கிலோ ரூ. 2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 14,255

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,14,040

வெள்ளி ஒரு கிராம் - ரூ. 255

வெள்ளி ஒரு கிலோ - ரூ. 2,55,000

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை