📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 16, 2026 11:01 AM

நேற்றைய விலைக்கே விற்பனையாகும் தங்கம்

நேற்றைய விலைக்கே விற்பனையாகும் தங்கம்

ஆயுத பூஜை பண்டிகை வரவிருக்கும் நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரங்கள் எப்படி இருக்கும் ? விலை கூடுமா ? குறையுமா ? என்ற குழப்பம் மக்களிடையே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்துகொண்டே வருகின்றது. இது பண்டிகை காலங்களில் தங்கம் வாங்க விரும்பும் மக்களுக்கு நற்செய்தியாக அமைந்திருக்கின்றது. அதுவும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஆண்டிற்கு கிட்டத்தட்ட 160 ரூபாய்க்கு மேல் குறைந்திருந்தது. இதனைத்தொடர்ந்து இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லைஆபரண தங்கத்தின் விலை நிலவரம்நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 75 ரூபாய் வரை குறைந்தது. ஒரு சவரனுக்கு 600 ரூபாய் சரிந்து விற்பனையானது. மேலும் இன்றும் அதே விலையில் தான் ஆபரண தங்கத்தின் விலை தொடர்கிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி 13,515 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 108,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றதுதூய தங்கம் விலைநேற்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமிற்கு 81 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து இன்றும் அதே விலையில் தான் தூய தங்கம் விற்பனையாகிறது. கிராம் ஒன்றிற்கு14,744 ரூபாயையும் ஒரு சவரன் தூய தங்கத்தின் விலை 117,952 ரூபாயுமாக உள்ளதுவெள்ளி விலை நிலவரம்வெள்ளியின் விலை கடந்த பல நாட்களாக கிராம் ஒன்றிற்கு 245 ரூபாயாக இருந்து வந்த நிலையில் நேற்று கிராமிற்கு ஐந்து ரூபாய் குறைந்து 240 ரூபாயாக இருந்தது. இன்றும் ஒரு கிராம் வெள்ளியின் விலை அதே 240 ரூபாயையும் ஒரு கிலோ வெள்ளி 240,000 ரூபாயுமாக இருக்கின்றது