📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 16, 2026 01:03 PM

இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன..?

இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன..?

தங்கம் விலை இந்த வார தொடக்கத்தில் இருந்து குறைந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் சவரனுக்கு ரூ.600-ம், கிராமுக்கு ரூ.75-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,120-க்கும், ஒரு கிராம் ரூ.13,515-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,08,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.13,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 40ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.